கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினியின் சிறுநீரங்கள் சரிவர இயங்காமலிருந்ததால், அவருக்கு 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்டது.
இதனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னேற்றம் காரணமாக, அவருக்கு தரப்படும் டயாலிஸிஸ் சிகிச்சையை நிறுத்தலாமா என ஆலோசனை செய்து வருகின்றனர் மருத்துவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக நேற்றும் இன்றும் அவரது ரத்தத்தில் சேரும் உப்பு, பொட்டாஷியம் மற்றும் கிரியோட்டினின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரத்தத்தில் இவற்றின் அளவு சாதாரணமாகவே இருந்தால், அவரது சிறுநீரகங்கள் வழக்கமான நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளதாக அர்த்தம் என்கிறார்கள்.
அப்படி ஒரு நிலை இருந்தால், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட மேல் சிகிச்சைப் பெறுவதற்காக ரஜினி லண்டன் செல்வார் என்று தெரிகிறது.
இதற்கான பயண ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருக்கு உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. குளிர்பானம், பாதாம் பிஸ்தா, முந்திரி, கீரை போன்றவற்றை தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
பூரண குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இயக்குனர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னதானம் செய்தார். இதுபற்றிய தகவல்கள் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது. அவற்றை கேட்டு அவர் நெகிழ்ச்சி அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
இதற்கிடையே ரஜினிக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ள அமெரிக்க டாக்டர்கள் ரஜினியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்து நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இப்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில தினங்களில் அவர்கள் நாடு திரும்பக் கூடும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment