தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் மீண்டும் மேலவை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்திலும், தமிழக மேலவைக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்த நிலையில், அதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. டிசம்பர் மாதத்துக்குள் மேலவை தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. என்றாலும் வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வரைவு பட்டியல் வெளியிடுதல் போன்றவற்றை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இடையில் மேலவை தேர்தலுக்கு எதிராக சில வழக்குகளும் தொடரப்பட்டன. இதற்கிடையே சட்டசபை தேர்தல் வந்தது. எனவே, மேலவை தேர்தல் தள்ளிப் போனது. தேர்தலுக்குப்பிறகு மேலவை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. புதிய தலைமைச் செயலகத்தில் மேலவைக்கான இடமும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அதிமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழக மேலவை எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது. 1989ல் ஆட்சிக்கு வந்த திமுக மேலவை அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்து 1991ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அதை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இது போல் 1996ல் திமுக கொண்டு வந்த தீர்மானத்தையும் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக ரத்து செய்தது.
எனவே, இப்போது அதிமுக ஆட்சியைப் பிடித்திருப்பதால் இந்த முறையும் மேலவை அமைக்கப்படுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.
3வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா மேலவை அமைப்பதில் சற்றும் ஆர்வம் காட்டவில்லை. எனவே இந்த முறையும் மேலவை அமைப்பதற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வந்து நிறை வேற்றப்படும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment