தனக்கு தமிழக மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டதாக, திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி இன்று ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த ஆளுனர், அடுத்தக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, "தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்," என்றார்.

No comments:
Post a Comment