தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஓய்வெடுப்பதற்காக வெளிநாடுகளூக்கு செல்வது வழக்கம்.
அதே போல் இந்தாண்டு விஜயகாந்த் தனது குடும்பத்துடன் இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகருக்கு சென்றார்.
கடந்த ஏப்ரல் 29ம் தேதி அன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகருக்கு சென்றார்.
மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர் சுதீஷ், அவரது மனைவி ஜோதி மற்றும் 2 குழந்தைகள் உடன் சென்றனர்.
13 நாட்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த விஜயகாந்த் இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய விஜயகாந்தை கட்சியின் அவைத்தலைவர் ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன் வரவேற்றார்.

No comments:
Post a Comment