அல் கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் வசித்து வந்த பாகிஸ்தானின் அபோத்தாபாத் வீட்டிலிருந்து ஆபாச படங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க கமாண்டோப் படையினர் பின்லேடனை வேட்டையாடிய பின்னர் இந்த ஆபாச வீடியோக்களை கண்டெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நவீன முறையில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆபாச படங்கள் இருந்ததாகவும், பெருமளவிலான வீடியோக்கள் சிக்கியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் எங்கு இந்த ஆபாச வீடியோக்கள் இருந்தது, அவற்றை யார் பார்த்து வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் இவற்றை பின்லேடன் வைத்திருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
பின்லேடன் வசித்து வந்த வீட்டில் இணையததள இணைப்பும், தொலைபேசி இணைப்பும் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்த வீடியோ படங்கள் இங்கு எப்படி வந்தன என்பது குறித்துத் தெரியவில்லை.
அதேசமயம், பின்லேடன் வீட்டில் டிவி இருந்ததும், அதை அவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டிருந்ததும் நினைவிருக்கலாம். எனவே இந்த ஆபாசப் படங்களை பின்லேடன் பார்த்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
பின்லேடன் மனைவிகளிடம் விசாரணை
இதற்கிடையே, பின்லேடனின் மனைவிகளிடம் அமெரிக்க சிஐஏ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்லேடனை வேட்டையாடிய அமெரிக்கப் படையினர், அவருடன் தங்கியிருந்த மூன்று மனைவியரையும் அங்கேயே விட்டு விட்டுப் போய் விட்டனர். அவர்கள் தற்போது பாகிஸ்தான் படையினர் வசம் உள்ளனர்.
அவர்களை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா கோரியது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டது. மாறாக, விசாரணை நடத்திக் கொள்ள அனுமதிப்பதாக அது கூறியது.
இதையடுத்து அமெரிக்க சிஐஏ குழுவினர் இஸ்லாமாபாத் சென்று பின்லேடன் மனைவியரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவினரும் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment