கோவை எப்பொழுதுமே எங்கள் கோட்டை என்று தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
வேலுமணி குதூகலம்
தொண்டாமுத்தூரில் வென்ற அதிமுக வேட்பாளர் வேலுமணி கூறுகையில், கோவை மாவட்டம் எப்பொழுதுமே அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம். இந்த வெற்றிக்கு என்ன பரிசு தர வேண்டுமென்று அம்மாவுக்குத் தெரியும். அதை அவர் செய்வார் என சூசகமாகத் தெரிவித்தார்.
மலரவன் மகிழ்ச்சி
கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் மலரவன் ஒருபடி மேலே போய், “கோவை மட்டுமின்றி, கொங்கு மண்டலமே அதிமுக கோட்டைதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. எனது தொகுதியிலுள்ள வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளில் உள்ள குடிநீர்ப் பிரச்னையினை தீர்த்து வைப்பேன். வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி, கிரயப்பத்திரம் கிடைக்காமல் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பேன்'' என்றார்.
சின்னராஜ் உறுதி
மேட்டுப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சின்னராஜ், கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு மின்சார ரயிலை இயக்கவும், சிறுமுகையில் பவானி ஆற்றைக் கடக்க புதிய பாலம் கட்டவும் முயற்சிப்பேன் என உறுதியளித்துள்ளார்.

No comments:
Post a Comment