காங்கிரஸுடன் வழக்கம் போல உறவு உறுதியாகவே உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கனிமொழி கைது காரணமாக திமுக வட்டாரத்தில் இறுக்கமான சூழல் காணப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதியை, கனிமொழி வீட்டிற்குச் சென்று திமுக முன்னணித் தலைவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவரிடம், காங்கிரஸுடனான உறவு முறியுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, காங்கிரஸுடன் உறவு உறுதியாக உள்ளது என்றார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, உயர்நிலை செயல் திட்டக் குழு முடிவெடுக்கும் என்றார்.
சோகமாக உணர்கிறேன்
கனிமொழி கைது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில், எல்லா தந்தைகளையும் போலவே, நானும் சோகமாக உணர்கிறேன் என்றார் கருணாநிதி.

சோகம் இருக்க தானே செய்யும் .. காங் . உறவு சந்தேகமே...
ReplyDelete