அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது பின்லேடன் பேச்சு அடங்கிய ஆடியோ கேசட்டை அல்கொய்தா இயக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டம் குறித்து பின்லேடன் கருத்து தெரிவித்துள்ளார்.
எகிப்து, துனிசியா ஆகிய நாடுகளில் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்காக தனது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த போராட்டத்தை வழிநடத்துவது குறித்து தனது அல்கொய்தா இயக்கத்தினருக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
பின்லேடன் உரை நிகழ்த்திய இந்த ஆடியோ கேசட் அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் 12 நிமிடங்கள் பேசியுள்ளார்.
இத்தகவலை அமெரிக்காவின் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும், “புனிதபோர்” குறித்த பின்லேடனின் உரை வீடியோ கேசட்டையும் அல்கொய்தா இயக்கத்தினர் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேசட் 37 வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகிறது.

No comments:
Post a Comment