ஆட்சி மாறியதிலிருந்தே அடங்காமல் ஆட்டம் போடுவது மிஸ்டர் நித்திதான்! ரஞ்சிதாவுடன் டூயட் பாடாத குறையாக ஆடித்தீர்த்த இந்த ஆபாச சாமியார், இடிந்து போன தனது இமேஜ் பொற்கோவிலை து£க்கி நிறுத்த படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில் இருந்த உருவம் கிராபிக்ஸ் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று அவர் சொல்வதை கேட்டு ஆடிப்போயிருக்கிறார்கள் அனிமேஷன் கில்லாடிகள். இந்தளவுக்கு நேர்த்தியாகவும் உயிரோட்டமாகவும் கிராபிக்ஸ் செய்கிற நபர் இந்தியாவில் இருந்தால், ரஜினி, அமிதாப் கால்ஷீட்டுக்காக யாரும் காத்திருக்க தேவையே இல்லையல்லவா!
போகட்டும்... விஷயத்துக்கு வருவோம். வடிவேலு 32 வேடங்களில் நடிக்கும் உலகம் படத்தில் ஒரு கெட்டப் நித்தியானந்தா மாதிரியானதாம். இதை கேள்விப்பட்ட நித்தி, கடந்த சில தினங்களுக்கு முன் வடிவேலுவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், என் புகழுக்கு களங்கம் விளைவிப்பது போல நீங்கள் நடிக்கவிருப்பதாக அறிகிறேன். அந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
அடிச்ச அலையில் வடிவேலுவே ஒதுங்கி போய் கிடக்கிறார். இதில் அவர் சொந்தப் படமெடுப்பார், நடிப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறாரே நித்தி? அதுதான் ஞானக்கண்ணும் அறியாத காமெடி!
No comments:
Post a Comment