வாய்ப்பில்லாமல் தவித்தபோது மலையாளம்தான் கைகொடுத்து உதவியது என்று சுனிதா வர்மா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பெரிய எதிர்பார்ப்புகளோடு தமிழில் அறிமுகமானேன். ஆனால் ஏமாற்றமாக இருந்தது. வாய்ப்புகள் இல்லாமல் தவித்தபோது மலையாள திரையுலகின் கதவு திறந்தது. அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கடைசியாக வெளியான ‘சீனியர்ஸ்’ படமும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன். ஆனாலும் தமிழில் நினைத்த இடத்தை பிடிக்கும் ஆசையில் இருக்கிறேன். தற்போது நடித்து வரும் ‘கருங்காலி’ ரீ என்ட்ரியை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
No comments:
Post a Comment