சினிமா கம்பெனிக்கு வீடு தேடி போகிற எவரையும் அவ்வளவு சுலபத்தில் மதிப்பதில்லை ஹவுஸ் ஓனர்கள். தப்பி தவறி வாடகைக்கு விடுகிறவர்கள் அனுபவிக்கிற சோகம் சொல்லி மாளாது என்பதால்தான் இப்படியொரு எரிச்சல். பொழுது சாய்ந்தால் போதும், பூ வாசனை அடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்று குற்றம் சுமத்துகிறார்கள் அவர்கள் மீது. யாரோ சிலர் செய்கிற தவறுகளால் யோக்கிய சிகாமணிக்களும் ஐந்து மடங்கு வாடகை அதிகம் கொடுத்து ஆபிஸ் பிடிக்க நேரிடுகிறது கோடம்பாக்கத்தில்.
நாம் சொல்லப் போகும் விஷயம் ரொம்ப அலாதியானது. பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஒரு கட்டளையிட்டிருக்கிறாராம் தமது அலுவலகத்தில். ஒரு பெண் கூட ஆபிஸ் வளாகத்தில் காலடி வைக்கக் கூடாது என்பதுதான் அந்த அரசக்கட்டளை. தப்பி தவறி பத்தி, பழம் விற்க வருகிற சேல்ஸ் கேர்ள்களை கூட உள்ளே அனுமதிப்பதில்லை வாட்ச்மேன்.
தற்போது அவரது அலுவலகத்தில் இரண்டு இயக்குனர்கள் அடுத்த பட வேலைகளை ஆர்வமுடன் கவனித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ஈரம் பட இயக்குனர் அறிவழகன். அதிர்ச்சியான அவர், சினிமா கம்பெனிக்கு பெண்கள் வரக்கூடாது என்றால் எப்படி சார்? நடிகைகள் தேர்வுக்கு பெண்களை வரச்சொன்னால் எங்கு வரச்சொல்லி பார்ப்பது என்று புலம்பினாராம்.
வேறு வழியில்லாத ஆஸ்கர் ரவிச்சந்திரன், தனியாக அதே தெருவில் இன்னொரு ஆபிஸ் ஒதுக்கி கொடுத்திருக்கிறார். நடிகைகள் தேர்வு மட்டும் அங்கு நடக்கிறதாம். தாடிக்கு ஒரு ஷாம்பூ, தலைக்கு ஒரு ஷாம்பூ. என்னத்தை சொல்ல...?
No comments:
Post a Comment