பெருக்கெடுத்து ஓடுகிற பிரச்சனையில் சுளுக்கெடுகிற மாதிரி ஒரு செய்தி. கோடம்பாக்கத்தில் வேக வேகமாக பரவி வரும் இந்த தகவலில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதோ, தெரியாது. அதை வெளிப்படுத்த வேண்டியது நம் கடமை என்பதால் சொல்கிறோம்.
சுமார் நாற்பது கோடி ரூபாய்க்கு இன்ஷ¨ர் செய்யப்பட்டிருக்கிறதாம் ராணா திரைப்படம். ஒருவேளை தவிர்க்க முடியாத காரணத்தால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனால் மேற்படி தொகையை இழப்பீடாக தர வேண்டும் என்பதுதான் இந்த காப்பீட்டின் அருமை பெருமைகளில் ஒன்று.
கடந்த ஒரு மாதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவும், அளிக்கப்படும் சிகிச்சைகளும் இந்த இன்ஷ§ரன்சை நோக்கி பார்வையை திருப்பியிருக்கிறதாம். முறைப்படி இந்த தொகையை கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அதே நேரத்தில் படப்பிடிப்பை இருபத்தைந்து சதவீதம் முடித்திருந்தால்தான் இழப்பீட்டு தொகையை பெற முடியும் என்பதால் அதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாம். ஆனால் தனுஷ் தன் பேட்டியில், ரஜினி சார் தொடர்ந்து நடிப்பாரா தெரியாது. ஆனால் ராணா படப்பிடிப்பு கண்டிப்பாக நடக்கும் என்று கூறியிருக்கிறார்.
கூட்டி கழித்து பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது.
No comments:
Post a Comment