புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையும் மீறி புகைபிடிப்பவர்கள், அதை புகைத்து கொண்டு தான் இருக்கின்றனர். சமீபகாலமாக இந்த பழக்கம் பெண்கள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது. இதுபோன்ற பழக்கத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணுகிறார் வாரணம் ஆயிரம், அசல் உள்ளிட்ட படங்களின் நாயகி சமீரா ரெட்டி.
இதுகுறித்து அவர் கூறியதாவது, பெண்கள் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இத்தகைய பழக்கங்களை பெண்களை கைவிட வேண்டும். எனக்கு இதுபோன்ற பழக்கம் ஏதுவும் கிடையாது. சிகரெட்டை விடுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பது எனக்கும் தெரியும். இருப்பினும், யோகா உள்ளிட்ட பயற்சிகளால் சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட முடியும். எனது நண்பர்கள் சிலரிடம் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தேன். அவர்களும் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment