அவர் போராட்டமே பெரும் போராட்டம். டைட்டிலும் அதே மாதிரியா இருக்க வேண்டும் என்று சின்ன கவலையோடு யோசிக்க வைக்கிறார் ஜெய் ஆகாஷ். அவரே இயக்கி நடித்து இருக்கும் படத்தின் பெயர் ஆயுதப் போராட்டம்.
ஈழம், ஈழத்தமிழர் பற்றிய கதைகள் என்றாலே எவ்வித கோட்பாடும் இல்லாமல் அப்படத்திற்கு தடை விதித்து வந்த தணிக்கை குழுவின் பார்வையும் சமீப காலத்தில் மாறியிருக்கிறது. அதனால்தான் இந்த முறை ஜெய் ஆகாஷின் முயற்சி எவ்வித அச்சமும் இல்லாமல் படமாகியிருக்கிறது. இந்திய தமிழனுக்கும் ஈழ தமிழனுக்கும் இடையேயான உணர்வு போராட்டம்தான் இந்த கதை என்கிறார் ஆகாஷ்.
அடடா என்ன அழகு படத்தின் போதே எந்த டைரக்டரையும் நம்பி பயனில்லை. இனி நானே எனக்கான படங்களை இயக்கிக் கொள்வேன் என்று கூறிவந்தவர், அந்த முயற்சியிலும் இறங்கிவிட்டார். ஒரு நடிகராக தன்னை சில படங்களில் நிரூபித்த ஜெய் ஆகாஷ், டைரக்டராக என்ன செய்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள இன்னும் சில மாதங்கள் காத்திருந்தால் போதும். ஆனால் நமக்காக திரையிட்ட இப்படத்தின் பாடல்களும், சில காட்சிகளும், அவருக்கு பாஸ் மார்க் போட வைத்தது!
ஆயுத போராட்டம் என்றால் எந்நேரமும் துப்பாக்கி சத்தம்தான் இருக்கும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். ஏனென்றால் படத்தில் இரண்டு சிட்டுகள் இருக்கிறார்கள். ப்ரித்தி மீனாள், அனிதா ரெட்டி என்ற அவ்விருவரும் ஆடைக்குறைப்பு பற்றி அலட்டிக் கொள்ளவும் இல்லை. தண்ணீரில் ஆகாஷ§டன் விழுந்து புரண்டு டூயட் பாடவும் தவறவில்லை.
அப்புறமென்ன... என்ஜாய் மக்களே!

No comments:
Post a Comment