கிருஷ்ணா-பிந்து மாதவி ஜோடியாக நடிக்க, பட்டியல் சேகர் தயாரித்துள்ள படம், `கழுகு.' இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.
பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டார்.
விழாவில், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, "கழுகு படத்தின் கதாநாயகி பிந்து மாதவி, சில்க் சுமிதாவை நகல் எடுத்த மாதிரி இருக்கிறார். சில்க் சுமிதாவின் கண்களைப்போல் இவருடைய கண்களும் ஈர்ப்புடையதாக இருக்கிறது'' என்றார்.
நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரன் பேசும்போது, "கழுகு படத்தின் பாடல் காட்சிகளை பார்க்கும்போது, "பிந்து மாதவி சில்க் சுமிதாவைப்போலவே இருக்கிறார்'' என்று என் கணவரிடம் சொன்னேன். சில்க் சுமிதாவுக்கும், பிந்து மாதவிக்கும் உருவ ஒற்றுமை இருக்கிறது'' என்றார்.
"சில்க் சுமிதாவுடன் உங்களை ஒப்பிட்டு பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று பிந்து மாதவியிடம் நிருபர்கள் கேட்டதற்கு,
’’சில்க் சுமிதா ஒரு அழகான நடிகை. மிக சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர். அழகு, நடிப்பு, நடனம் ஆகிய மூன்றும் அவரிடம் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு பெரிய நடிகையுடன் என்னை ஒப்பிட்டுப் பேசியதை நான் பெருமையாகவே கருதுகிறேன்.
அவர் கண்களைப்போலவே எனக்கும் ஈர்ப்புள்ள கண்கள் என்று பேசியதைக் கேட்டு சந்தோஷப்பட்டேன். ஆச்சரியப்பட்டேன்.
சில்க் சுமிதாவின் வாழ்க்கை, `டர்ட்டி ஸ்டோரீஸ்' என்ற பெயரில் இந்தியில் படமாகிறது. அதில், சில்க் சுமிதாவாக வித்யா பாலன் நடிக்கிறார். அப்படி ஒரு வேடம் தமிழில் எனக்கு கிடைத்தால், நிச்சயமாக நடிப்பேன்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment