சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் இன்று ஆஜரானார்கள். இன்று நடைபெற்ற விசாரணையில் முதல் முறையாக சசிகலா கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்த விசாரணையின் போது ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது:
ஜெயா பப்ளிக்கேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நானே முழுமையாக நிர்வகித்து வந்தேன். ஜெயலலிதா பங்குதாரராக மட்டுமே இருந்து வந்தார். மேலும், வங்கிக்கணக்கையும் நானே முழுமையான பொறுப்பேற்றேன். என கூறியுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய சசிகலா சில கேள்விகள் கேட்டபோது உணர்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். இந்த வழக்கு தொடர்பாக 250 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்ட உள்ளது என தகவல்கள தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment