ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் டையில் முடிந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சண்டிமால் 81 ரன்களும், ஜெயவர்த்தனே 43 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும், இர்பான் பதான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 236 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிந்த இந்த போட்டி ரசிகர்களை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக கம்பீர் 91 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்
இந்நிலையில் இந்த போட்டியில் நடுவர்களின் தவறு காரணமாக இந்திய அணியின் வெற்றி பறி போகியுள்ளது தெரிய வந்துள்ளது.
இலங்கை அணியின் வீரர் மலிங்கா வீசிய 30-வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இதனை களத்தில் நடுவர்களாக இருந்த நிஜல் லாங், சைமன் ஃப்ரை ஆகியோரும் கவனிக்கவில்லை. டிவி நடுவராக இருந்த புரூஸ் ஆக்ஷன்போர்டு-ம் கவனிக்கவில்லை. அந்த ஓவரில் இந்தியா 9 ரன்கள் எடுத்திருந்தது. கடைசியில் இந்தியாவுக்கு 1 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்த பந்து கிடைத்திருந்தால் இந்தியா வெற்றியை சுவைத்திருக்கும்.
நடுவர்களின் கவனக்குறைவால் இரு அணிகளின் வெற்றி வாய்ப்பும் பறிபோயுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment