இப்போது உலக மக்களிடம் அதிகமாக விவாதிக்கப்படுவது 'இலங்கை போர் குற்றம் இளைத்து விட்டது, எனவே அந்த நாட்டின் அதிபரை உலக நாடுகள் அனைத்து சேர்ந்து குற்றவாளி குண்டி ஏற்றி தண்டனை வழங்க வேண்டும்." என்பதே அப்படி என்றால் இலங்கை போர் குற்றம் இளைத்து விட்டதா போரில் எப்படி குற்றம் இளைக்க முடியும்
'போர் குற்றம்' என்றால் என்ன போர் என்றாலே குற்றம் தானே? அதில் என்ன நியாயம், அநியாயம் இருக்க போகிறது. போர் என்று வந்து விட்டால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று தான் நம்மில் பல பேர் நினைத்து கொண்டு இருக்கிறோம். நாம் தான் சாதாரண மக்கள் நமக்கு என்ன தான் தெரியும் உலக சட்டத்திட்டங்களை பற்றி. ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் உலக தலைவியாக தன்னை நினைத்து கொண்டு இருக்கும் செல்வி?.ஜெயலலிதா அவர்கள் கூட இலங்கையில் போர் நடக்கும் பொது "இத்தனை உயிர்கள் அதுவும் அப்பாவி தமிழன் குவியல் குவியலாக கொலை செய்யப்படுகிறானே ...?" என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் " போர் என்று வந்து விட்டால் உயிர் இழப்புகளும் இருக்க தான் செய்யும், இது அப்பாவி மக்கள் இது விடுதலை புலிகள் என்று தெரிந்து பார்த்து குண்டு போட வேண்டும் என்று சொல்வது முட்டாள் தனமானது , அது நடைமுறைக்கு சாத்தியபடாதது." என்று இளக்காரமாக பதில் சொல்லி இருந்தார். அவருக்கும் , அவரை போன்று எண்ணிகொண்டு இருக்கும் பலருக்கும் எனது இந்த பதிவு சமர்ப்பணம் .
ஒரு நாடு போர் புரிவதற்குக் கூட சட்டதிட்டங்கள் உள்ளனவா? அச் சட்டங்கள் யாவை? சிறீலங்கா அரசு மீறியுள்ள அனைத்துலக போரியல் சட்ட திட்டங்கள் எவை?
எதன் அடிப்படையில் தமிழர்கள் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்? என்ற உங்களது அனைத்து வகையான வினாக்களுக்கும் சுவிஸ் ஈழத்தமிழரவையும், அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பும் இணைந்து, இக் கைநூல் ஊடாக கருத்துத் தெளிவாக்கம் அளிக்கின்றனர்.
இது ஒரு முதல் முயற்சியே. தேவைக்கேற்ப இக்கைநூல் விரிவாக்கப்பட்டு மெருகூட்டப்படும்.
No comments:
Post a Comment