இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ், 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
செஞ்சுரியன் பார்க்கில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. மிகவும் விறுவிறுப்பாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது இந்தியா. வெறும் 136 ரன்களை மட்டுமே அது எடுத்தது. அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணி 620 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. கம்பீர் 80, ஷேவாக் 63, டோணி 90 ரன்களைக் குவித்தனர். டிராவிட் தன் பங்குக்கு 43 ரன்கள் எடுத்தார்.
ஆனால் ஆட்டத்தின் முக்கிய அம்சமாக சச்சின் டெண்டுல்கரின் 111 ரன்கள் அமைந்தது. டெஸ்ட் வரலாற்றில் 50வது சதத்தைப் போட்டார் சச்சின். மேலும் அணியை பெரும் இக்கட்டிலிருந்து சற்று பரவாயில்லை என்றநிலைக்குக் கொண்டு சென்றார். அப்படியே இன்னிங்ஸ் தோல்வியையும் சச்சின் தவிர்க்க உதவலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் அந்த எண்ணம் வீண் போனது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா படு வேகமாக சரிந்து ஆல் அவுட் ஆனது. சச்சின் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 111 ரன்களுடன் களத்தில்இருந்தார்.
No comments:
Post a Comment