Friday, December 24, 2010
இன்று காலை 10 சிபிஐ விசாரணை-நேரில் ஆஜராகிறார் ராசா
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடைபெறுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா, நீரா ராடியா, முன்னாள் டிராய் தலைவர் பிரதீப் பைஜால் உள்ளிட்டோரின் இல்லங்கள், அலுவலகங்கள் சிபிஐ சோதனைக்குள்ளாகின. மேலும், ராசாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் ரெய்டுகள் நடந்தன. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து தற்போது இவர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது. ராடியா, பைஜாலிடம் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது. இந்த நிலையில் ராசாவிடம் இன்று விசாரணைநடைபெறவுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு ராசா இன்று செல்கிறார். அங்கு வைத்து விசாரணை நடைபெறும்.
சிஆர்பிசி (குற்றவியல் சட்டம்) பிரிவு 160ன் கீழ் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் கீழ் ராசாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படவுள்ளது.
விசாரணைக்கு ஆஜராவதற்காக ராசா நேற்று இரவு டெல்லி புறப்பட்டு வந்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு அவர் விசாரணையில் ஆஜராகவுள்ளார்.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
காபி, பேப்பர், வித் வடை........... தகவல் அருமை
ReplyDelete