டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. குவாஹட்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இன்று எந்தவித மாறுதலும் செய்யப்படவில்லை. நியூஸிலாந்தில் பிரன்டன் மெக்கல்லம் இன்றும் விளையாடவில்லை. ஆனால் கிரான்ட் எலியோட்டுக்கு பதிலாக கேப்டன் டேனியல் வெட்டோரி களமிறங்கியுள்ளார். காயமடைந்துள்ள டாரில் துஃபேக்கு பதிலாக டிம் செளதீ களமிறக்கப்பட்டுள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக குப்டில், ஹௌ ஆகியோர் களமிறங்கினர். 4-வது ஓவரிலேயே ஹௌ ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில்லியம்சன் 29 ரன்களுக்கும், டெய்லர் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவந்த குப்டில் 70 ரன்கள் எடுத்திருந்தோபுத அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ஸ்டைரிஸ், வெட்டோரி ஆகியோர் நிதானமாக ஆடினர். 59 ரன்கள் எடுத்து ஸ்டைரிஸ் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது.
இந்தியத் தரப்பில் ஸ்ரீசாந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முனாப் படேல், அஸ்வின், பதான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
. அதன் பிறகு ஆடத்துவங்கிய இந்தியா அதிரடியாக ஆடியது. துவக்க ஆட்டக்கரார்களாக களமிறங்கிய இந்திய கேப்டன் காம்பிரும் தமிழக வீரர் விஜயும் அடித்துஆடினார்கள் விஜய் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு காம்பிருடன் ஜோடி சேர்ந்தார். பிறகு காம்பிரும் கொஹ்லியும் சேர்ந்து நியுசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை அடித்து தூள் கிளப்பினர். இறுதியில் கொஹ்லி 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு யுவராஜ் காம்பிருடன் ஜோடி சேர்ந்தார். இறுதியில் ஓவர்களில் ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. காம்பிர் 138 ரன்களுடனும் யுவராஜ் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். காம்பிர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
No comments:
Post a Comment