தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் சதமடித்து சாதனை புரிந்தார். இது டெஸ்ட் அரங்கில் சச்சின் எடுக்கும் 50வது சதமாகும். கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் 50வது சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் சச்சின் படைத்தார்.
இந்திய அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழந்து 454 ரன்களுடன் போராடிவருகிறது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பில் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 107 ரன்களுடனும் ஸ்ரீசாந்த் 3 ரன்களுடனும் களத்தில் <உள்ளனர். தோனி 90 ரன்களுக்கும், காம்பீர் 80 ரன்களுக்கும், சேவக் 63 ரன்களக்கும், டிராவிட் 43 ரன்களுக்கும், இஷாந்த் சர்மா 23 ரன்களுக்கும் அவுட்டாயினர். இதனால் இந்திய அணிக்கு 2 விக்கெட்டுகள் மட்டும் மீதம் உள்ள நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 30 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் தடுமாறி வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 136 ரன்கள் மட்டும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 620 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
No comments:
Post a Comment