காங்கிரஸ் எகிறினால் திமுக தாஜா செய்வதும், திமுக மிரட்டினால் காங்கிரஸ் இறங்கிப்போவதுமாக இருந்த இந்த கூட்டணியில்,நேற்று திமுக முறுக்கிக்கொண்ட நிலையில், இன்று காங்கிரஸ் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ராசா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சிபிஐ-யை விட்டு திடீர் சோதனை நடத்த செய்து தனது பலத்தை காட்டியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியதிலிருந்தே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உரசல்கள் வெளியாகத் தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கூட இலங்கை தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது, திமுகவை அதிகம் எதுவும் பேசவிடாமல் வைத்ததும், "சொக்கத்தங்கம் சோனியா" என்று கருணாநிதியை சொல்லவைத்ததும் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம்தான் என்று அப்போதே ஒரு பேச்சு எழுந்ததுண்டு.
இந்நிலையில் கனலாக உள்ளுக்குள் தகித்துக்கொண்டிருந்த ஸ்பெக்ட்ரம் என்ற எரிமலை, அண்மையில் மத்திய தலைமை கணக்காளரின் அறிக்கை வெளியானதும் வெடித்தேவிட்டது.
இதனைத் தொடர்ந்து ராசாவின் பதவியை காப்பாற்ற திமுக தலைமை எவ்வளவோ மல்லுக்கு நின்றும், இனியும் விட்டுவைத்தால் தங்கள் ஆட்டமே ஆட்டம் கண்டுவிடும் என்ற எண்ணத்தில் ராசாவை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டது காங்கிரஸ்!
இதில் திமுக தலைவர் கருணாநிதி ஏகத்திற்கு அதிர்ச்சியடைந்து போனார்.அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், கட்சிக்கு இப்படி ஒரு அவமானமாகிவிட்டதே என்று மனம் புழுங்கியவர், அதை சரிக்கட்ட தலித், கைபர் கணவாய் என்று வழக்கமான அஸ்திரத்தை வீசி பார்த்தார்.ஆனால் அவை முனை மழுங்கி முறிந்துபோனதுதான் மிச்சம்!
அதே சமயம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலமாக ஆதாயமடைந்தது திமுக மட்டும் அல்ல; காங்கிரஸ் தரப்பும்தான் என்பது கருணாநிதிக்கு தெரியும் என்பதால், அந்த அஸ்திரத்தை வீச தருணம் பார்த்து காத்திருந்தார்.
அப்போதுதான் வந்தது பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவு.பீகார் தேர்தலில் வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று காங்கிரஸ் மரண அடி வாங்க தெம்பாகி போனார் கருணாநிதி.
"இஷ்டம் இருந்தால் கூட்டணியில் நீடிப்போம்; இல்லையென்றால் முறித்துக்கொள்ளுங்கள்" என்று பொது நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சிக்கு மறைமுக மிரட்டல் விட்டார்.
அடுத்ததாக, "அவ்வளவு பெரிய ஊழலை - அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை - ஒருவர் மட்டுமே செய்ய முடியுமா?" என்று இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சினிமா விழா ஒன்றில் பேசுகையில் கேட்டார் கருணாநிதி.
அதாவது இந்த ஊழலில் திமுகவுக்கு மட்டுமே பங்கில்லை; காங்கிரசுக்கும் உள்ளது என்பதை சொல்லாமல் சொன்னவர், அதை வெளிப்படையாக சொல்ல நேரிடும் என்று காங்கிரசை மிரட்டுவதாகவே தமிழக எதிர்கட்சிகள் அதற்கு அர்த்தம் கூறின.
ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராசாவையும் தாண்டி, சோனியா காந்தியை நோக்கி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி கைகாட்ட தொடங்கிவிட்ட நிலையில், கருணாநிதி வேறு மிரட்டல் அஸ்திரத்தை கையெலெடுத்ததும் காங்கிரஸ் ஆத்திரமடைந்துதான் போனது

கடந்த 2 வாரங்களாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை அவசியம் என்று கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.
ஆனால் ராஜாவைக் கைவிடாமல் தொடர்ந்து அவருக்கும் சேர்த்தே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வாதாடி வருகிறது மத்திய அரசு. சமீபத்தில் கூட முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் ராஜாவைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறுவது போல நடந்து கொண்டார். இதையும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கின.
இந்த நிலையில், தற்போது கருணாநிதியின் இந்த அறிக்கையினால் ஆத்திரம் அடைந்த மத்திய அரசு அதிரடி அந்தர் பல்டியாக ராஜாவை கீழே தூக்கிப் போட்டுள்ளது. மொத்தப் பழியையும் தற்போது ராஜா மீது திருப்பும் வகையில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பிரதமரும், சட்ட அமைச்சரும் சில கருத்துக்களை வைத்திருந்தனர். அதற்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் (ராஜா) உரிய முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பிரதமரின் அறிவுரைகளை தொலைத் தொடர்பு அமைச்சர் பின்பற்றவில்லை. மதிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் தொலைத் தொடர்புத்துறை மிகவும் வெளிப்படையான துறையாக இருந்திருக்க வேண்டும் என்றார்.

ராஜாவை அம்போ என கைவிடும் வகையில் கோபால் சுப்ரமணியம் இன்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று திடீர் என ராசா வீடுகளிலும் அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் அதிரடியாக சிபிஐ -யை ஏவி விட்டு சோதனை நடத்தியுள்ளது. இதனால் திமுக ஆத்திரத்தின் உச்சிக்கே போகி விட்டதாக கூறப்படுகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் பொது திமுக, காங்கிரஸ் கூட்டணி விரைவில் முறியும் நிலை வரலாம், என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment