Monday, December 20, 2010
காங்கிரஸாரைத் தாக்கிய கலெக்டருக்கு காந்தி விருது வழங்குகிறது காங்கிரஸ்
திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் காங்கிரஸாரைத் தாக்கியதாக சர்ச்சைக்குள்ளான கலெக்டர் ராஜேந்திரனுக்கு காந்தி விருது கிடைத்துள்ளது.
திருவண்ணாமலை நகரில் காந்திய பேரவையின் 19ம் ஆண்டு விழா 18, 19ம் தேதி என இரண்டு தினங்கள் நடந்து வருகிறது. இந்த பேரவையினை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், போளுர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.விஜயகுமார் நடத்தி வருகிறார்.
இப்பேரவையின் சார்பில் இன்று 5 பேருக்கு காந்திய விருது. வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரனுக்கும் இவ்விருது வழங்கப்பட போவதாக அறிவித்துள்ளது காந்திய பேரவை.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு காந்திய விருது பெற போகும் இதே மாவட்ட ஆட்சித்தலைவர் கேள்வி கேட்க போன காங்கிரஸ் பிரமுகர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து சர்ச்சையை ஏற்படுத்தி பெரும் பிரச்சனையானது.
இந்த அடிதடி பிரச்சனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸார் சாலை மறியல் செய்தனர், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் இயற்றியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏவுமான விஜயகுமார் நடத்தும் ஒரு காந்திய பேரவை, அகிம்சையை போதித்த காந்தி பெயரிலான விருதை அதற்கு நேர்மாறாக விளங்கும் ஒரு அதிகாரிக்கு அவ் விருது வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment