"விக்கிலீக்ஸ்" நிறுவனர் அசாங்காவை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், அவரை விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை அம்பலப்படுத்திய "விக்கிலீக்ஸ்" நிறுவனர் அசாங்கா, பாலியல் குற்றச்சாற்று தொடர்பாக ஸ்வீடன் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவின் பேரில் லண்டனில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
இதனையடுத்து அவரை பிணையில் விடுதலை செய்யக் கோரி அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த நீதிபதி ஹவார்ட், அசாங்காவுக்கு நிபந்தனை பிணை வழங்கினார்.
2 நபர் உத்தரவாதத்துடன் ரூ.1 கோடியே 50 லட்சம் காப்புறுதி தொகை செலுத்த வேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நீதிமன்றம் பிணை வழங்கியபோதிலும், அசாங்கா உடனடியாக விடுதலை செய்யப்படவில்லை.
ஏனெனில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து ஸ்வீடன் வழக்கறிஞர்கள் உடனடியாக மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து,அந்த மனு மீதான விசாரணை 48 மணி நேரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதனால் அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அசான்ஜேவுக்கு உத்தரவாதம் அளிக்க முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெமீமா கான், மைக் ஜேகர் உள்ளிட்டோர் முன்வந்துள்ளனர்
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment