வடக்கில் நிலைகொண்டு விடுதலைப் புலிகளுடன் போரிட்ட இலங்கை ராணுவத்தினருக்காக, பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி விபச்சார செயலில் ஈடுபட்டார் கருணா. அதேபோல பல்வேறு சட்டவிரோத கொலைகள், ஆள் கடத்தல், பணம் பறித்தல் என அனைத்து சட்ட விரோத செயல்களையும் அவர் செய்தார் என்று கருணாவின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.
கடந்த 2007-ம் ஆண்டு மே 17ம் தேதி இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்த சில கேபிள்களை அனுப்பி வைத்துள்ளது. அவற்றை நேற்று வெளியிட்டது விக்கிலீக்ஸ்.
அதில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து துரத்தப்பட்டு தனி போராளி குழுவை உருவாக்கி பின்னர் ராஜபக்சே அரசுடன் இணைந்து கொண்டு கருங்காலியாக மாறிய கருணாவின் பயங்கர சுயரூபத்தை அதுவெளிப்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போனதும், ராணுவத்துக்கு எந்த அளவு கேவலமான வேலைகளைச் செய்துள்ளார் கருணா என்பதையும் அது வெளிக்காட்டியுள்ளது. தற்போது கருணா, ராஜபக்சே அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலைய கருணாவுக்கும் அவரது குழுவினருக்கும் உத்தரவிட்டார் கோத்தபயா ராஜபக்சே.
இதே வேலையை டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி குழுவுக்கும் அவர் பணித்திருந்தார். இருவரும் சேர்ந்து தமிழ் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறித்து கோத்தபயாவுக்கு கொடுத்து வந்தனர்.
தற்போது அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), இந்த ஆவணம் அனுப்பப்பட்ட காலகட்டத்தில் அதிக அளவிலான கப்பம் பெற்றதுடன், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த ராணுவத்தினருக்காக விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் பலவேறு பெண்களை அனுப்பி வைத்தார் கருணா. இதற்காக தனியாக ஒரு விபச்சாரக் குழுவையும் அவர் வைத்திருந்தார். கருணாவின் நிர்ப்பந்தம் மற்றும் உயிர்ப்பயம் காரணமாக இந்த பெண்கள் கருணாவின் உத்தரவுக்கு கட்டுப்பட நேரிட்டது.
மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்த ராணுவத் தளபதிகளை அழைத்த கோத்தபயா ராஜபக்சே அங்கு தமிழ் எம்.பிக்கள் (கருணாவும், டக்ளஸும்) செய்துவரும் சில வேலைகளில் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தினார். ராணுவத்தின் செயலை சர்வதேச நாடுகள் கண்காணிக்கின்றன. எனவே நம்மால் செய்ய முடியாத சில வேலைகளை இவர்கள் செய்வார்கள். அதில் யாரும் குறுக்கிட வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வேலைகள் என்று இதில் கூறப்பட்டிருப்பது, கடத்தல், படுகொலைகள், பணம் பறித்தல், விபச்சாரம் ஆகியவையாகும்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெகரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தில் கருணாவை மிகப் பெரிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கருணா பல்வேறு வகையான குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். பணம் பறிப்பது, ஆட்களை கடத்தி மிரட்டுவது, சட்டவிரோதமான கொலைகளில் ஈடுபடுவது, ராணுவத்தினருக்குத் தேவையான பெண்களை சப்ளை செய்வது ஆகியவை இதில் அடக்கம்.
ராணுவத்தினருக்கு எப்போதெல்லாம் பெண்கள் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அனுப்பி வைத்தவர் கருணா.
2006ம் ஆண்டில் அரசின் ஆதரவு காரணமாக, கருணா, டக்ளஸ் ஆகியோரின் தலைமையில் இயங்கி வந்த குழுக்கள் மிகப் பெரிய அளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டன. கருணா, டக்ளஸ் கும்பல்கள், குழந்தைகள் கடத்தலிலும் கூட ஈடுபட்டிருந்தன.
விடுதலைப் புலிகள் என்று சந்தேகப்படுவோரை கடத்தி வரும் பொறுப்பையும் கருணா, டக்ளஸிடம் இலங்கை அரசு கொடுத்திருந்தது. இந்தக் குழுக்களுடன் தங்களுக்குத் தொடர்பு இல்லை ராணுவம் கூறியபோதும், அவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மை.
அரசின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்ததால் எம்.பிக்களுக்கான சம்பளத்தை ரத்து செய்திருந்தார் அதிபர் ராஜபக்சே. இதற்குப் பதிலாக கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்டவற்றில் கருணா, டக்ளஸ் ஈடுபடுவதை அவர் தடுக்கவில்லை. மாறாக மறைமுகமாக ஆதரித்தார்.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல், இந்திய வம்சாவளி தமிழர்களையும் கூட மிரட்டிப் பணம் பறித்து வந்தனர் டக்ளஸ், கருணா கும்பல்கள் என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டப்பன் கருணாவின் தமிழ் பற்றை மற்றவர்களும் அறிந்து கொள்ள, தமிழனாய் ஓட்டளிப்பதன் மூலம் இந்த செய்தி அதிகம் பேரை சென்றடைய செய்யுங்கள்
No comments:
Post a Comment