இந்திய வீரர் சச்சின் இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி ரன் குவித்து வருகிறார். தென் ஆப்ரிக்க அணியுடன் செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்டில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்த சச்சின் மகத்தான சாதனை படைத்தார். இந்நிலையில் சச்சின் சிறந்த வீரரா? அல்லது மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் சிறந்த வீரரா? என மெல்போர்னில் உள்ள புகழ்பெற்ற மார்னிங் ஹெரால்டு என்ற பத்திரிகை ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது.
20 ஆயிரத்து 768 பேர் இதில் வாக்களித்தனர். இதில் 67 சத வீதம் பேர் சச்சின் தான் சிறந்த வீரர் என கருத்து தெரிவித்துள்ளனர்.
பிராட்மேன் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தான் ஆடியுள்ளார். ஆனால் சச்சின் டெஸ்ட், ஒன்டே, 20&20 என 3 வகையான ஆட்டங்களில் அபாரமாக ஆடி ரன் குவித்து வருகிறார்.
சர்வதேச போட்டிகளில் அவர் குவித்துள்ள 30 ஆயிரம் ரன்கள், 50 டெஸ்ட் சதங்கள், 45 ஒருநாள் போட்டி சதங்களே இதற்கு சாட்சி. பிராட்மேன் 4 நாடுகளுக்கு எதிராகத்தான் ஆடினார். அதுவும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் தான் அதிக ஆட்டங்கள் நடந்தது. மேலும் பிராட்மேன் மொத்தம் குவித்துள்ள 7 ஆயிரம் ரன்களில் 5 ஆயிரம் ரன் ஒரே ஒரு நாட்டிற்கு எதிராக குவித்தவை தான்.
ஆனால் சச்சின் எல்லா நாடுகளிலும் ஆடியுள்ளார். 12 நாடுகளின் பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்து வருகிறார். எந்த நாட்டு பந்துவீச்சாளர்களும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை என ஆன்லைனில் ஏராளமான ஆஸி. ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment