லண்டனில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நேற்று மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல், இலங்கை தூதரகம் மற்றும் விமான நிலையம் என்பவற்றுக்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
லண்டனில் ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 30ஆம் திகதி இலங்கையிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்டார்.
அங்கு ஜனாதிபதி சென்றபோது, புலம் பெயர் தமிழர்கள் விமான நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜனாதிபதியை போர்க்குற்ற விசாரணைக்காக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் ஜனாதிபதியை பிரித்தானிய பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மத்திய லண்டனிலுள்ள பார்க் ரோட் ரோச் செஸ்டர் ஆடம்பர விடுதியில் தங்கவைத்தனர். அங்கு தங்கியிருந்த ஜனாதிபதி நேற்று ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரை நிகழ்ந்தவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ் உரையும் ரத்து செய்யப்பட்டது.
ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டுக்கு வரும் பொது எவ்வளவு வரவேற்பு கொடுப்பார்கள். அதற்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். என்பதெல்லாம் நமக்கு தெரிந்ததே. ஒரு நாட்டின் அதிபர் மற்றொரு நாட்டுக்கு வரும்போது அந்த நாட்டின் அதிபர் அல்லது அதிபரின் சார்பாக யாரவது வரவேற்பதும் அவர்களை அழைத்து சென்று ராஜ உபசாரம் அளிப்பதும் தான் வழக்கம் ஆனால் பிரிட்டன் விஜயம் செய்த மகிந்தா ராஜபக்சேவை யாரும் கண்டு கொள்ள வில்லை. ஆனால், பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் மகிந்தாவை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார். இது சிறீலங்காவுக்கு சார்பான அவரின் கொள்கைகளை எடுத்துக்காட்டுகின்றது. இவர் இலங்கை வரும் வேளைகளில் எல்லாம் இவரது பயணச்செலவு உட்பட அனைத்து செலவுகளையும் இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளும். அந்த நன்றிகடனுக்காக தான் இவர் ராஜபக்சேவை சந்தித்துள்ளார். என்று த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது
இதனையடுத்து நேற்றிரவு ஜனாதிபதி இலங்கைக்கு திரும்பவிருந்த நிலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பாக சுமார் 50 ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகம், விமான நிலையம் என்பவற்றுக்கு முன்பாகவும் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற மூன்று இடங்களிலும் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் ஜனாதிபதிக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
50௦ ஆயிரம் தமிழர்கள் குடியேறி வாழும் ஒரு நாட்டில் அந்த தமிழர்களால் இந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டி திரும்பி பின் வாசல் வழியாக ஓட்டம் எடுக்க வைக்க முடியும் பொது 7கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழும் நமது தேசத்தில் தமிழனை கொன்று கோவித்து விட்டு அந்த இரத்த கறை காயும்முன் வருகிறார். அவருக்கு நமது உதவியோடு ஆட்சி செய்யும் ஒரு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறது. நாமும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தான் மானமில்லாத தமிழ்நாட்டு தமிழன். பிரியாணி பொட்டலமும், ஆயிம்பது ரூபாவும் கொடுத்திருந்தால் சென்று இருப்பான் போராட்டம் நடத்த, சாப்பாட்டுக்கு அலையும் தொண்டனாய்.
இப்போது வைகோ அறிக்கை விட்டு இருக்கார். இந்தியாவில் ராஜபக்சேக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்கும் பொது இவர் என்ன பண்ணி கொண்டு இருந்தார். போக வேண்டியது தானே தனது படை பரிவாரங்களோடு டெல்லி நோக்கி ...தேர்தல் சமயம் என்றால் போய் இருப்பார். தமிழ்நாட்டு தமிழனின் தமிழ் உணர்வுகளை கேவல படுத்துவதும், மரத்துபோக செய்வதும் இந்த அரசியல் வாதிகள் தான். இவர்கள் இந்த விசயத்தில் பேசாமல் இருந்தாலே போதும், பத்திரிக்கைகளாலும் , ஊடகங்களாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்பது எனது கருத்து.
தமிழர்களின் போராட்ட வீடியோ
இறுதியில் இவனை இப்படி நிறுத்த வேண்டும் தெருவில். கல்லால் அடித்து கொல்வதற்கு
No comments:
Post a Comment