தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று பிற்பகலில் விடுதலை செய்யப்பட்டார். முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா என்று கேள்விக்கு நடக்கலாம் என்று அவர் கூறினார்.
தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை கடற்படையையும், இலங்கை அரசையும் கண்டித்து நடந்த போராட்டத்தில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார் சீமான். ஆனால் அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து சீமான் விடுதலையாகிறார். இன்று காலை அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோர்ட் உத்தரவு வராததால் சீமான் விடுவிக்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் கோர்ட் உத்தரவைப் பெற்று வந்து சிறையில் ஒப்படைத்தார். அதன் பின்னர் பிற்பகல் இரண்டரை மணியளவில் சீமான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு சிறை வாசலில் நாம் தமிழர் அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கூடி வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இயக்குநர் பாலா, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் தந்தை மனோகரன், இயக்குநர் கெளதமன், பேராசிரியர் தீரன், மதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் சீமானை வாழ்த்தி வரவேற்றனர்.
சீமானை வரவேற்க தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். ஏராளமான பத்திரிக்கையாளர்களும் குழுமியிருந்தனர். இருப்பினும் யாரையும் சிறை வளாகத்திற்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை.
மாறாக, பத்திரிக்கையாளர்களாகவே இருந்தாலும் சிறைக்கு வெளியில்தான் நிற்க வேண்டும் என்று கூறி விட்டனர்.
இதனால் பத்திரிக்கையாளர்களும், நூற்றுக்கணக்கான நாம் தமிழர் அமைப்பின் தொண்டர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிறைக்கு வெளியே காத்திருந்தனர்.
சிறையிலிருந்து வெளி வந்த சீமான் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கருணாநிதியை எதிர்த்து போட்டி - சீமான் பேட்டி
நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தனர். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது.
இந்த முறை 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இதனால் எனது தொழில் முடங்கியது. இதற்கெல்லாம் தமிழக அரசுதான் காரணம். அதனால் தமிழக அரசிடம் நஷ்ட ஈடு கேட்க உள்ளோம் என்று கூறினார் சீமான்.
அப்போது ஒரு செய்தியாளர், தமிழக அரசு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்ததாக கூறுகிறீர்களே, அதுகுறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டபோது, தமிழக அரசு மீது வழக்கு போட முடிவு செய்துள்ளோம் என்றார்.
மேலும் வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடப் போவதாக தெரிவித்த சீமான், நான் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார். திமுகவை எதிர்த்து உங்களது கட்சி போட்டியிடுமா என்ற கேள்விக்கு, நாம் தமிழர் இயக்கத்துக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியான எதிரி. அவர்களோடு கூட்டணி யார் வைத்தாலும் அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என்றார் சீமான்.
முதல்வர் கருணாநிதியை எதிர்த்து நீங்கள் பொது வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக நாம் தமிழர் இயக்கத்தினரால் சொல்லப்படுவது உண்மையா? என்ற கேள்விக்கு, நடக்கலாம் என்று பதிலளித்தார் சீமான்.
அரசு மீது வழக்கு தொடருவோம்-சீமான் வக்கீல்:
சீமான் விடுதலை குறித்துஅவரது வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில்,
அராஜக கொடுங்கோல் அரசை எதிர்த்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டது. விடுதலைக்கான உத்தரவு நீதிமன்றம் தந்தும், சீமானை விடுதலை செய்ய அரசாங்கம் முட்டுக்கட்டை போட்டது.
பல முட்டுக்கட்டைகளை கடந்து, விடுதலைக்கான ஆணைகளை பெற்று வந்து நாங்கள் சிறையில் தந்துள்ளோம். அதிகாரிகளையும் தரவைத்தோம். சீமானை 5 மாதம் சிறையில் வைத்தததற்காக தமிழக அரசு மீது வழக்கு தொடர உள்ளோம் என்றார் சந்திரசேகர்.

ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
No comments:
Post a Comment