விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பதில் சொல்ல மறுத்தார்.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர் நேற்று மாலை மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதில் பேசிய ஒரு காங்கிரஸ் தொண்டர், ‘நான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கடிதம் எழுதினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனைப் பிடித்து தூக்கில் போட வேண்டும் என்றும் உங்களுக்கு முன்பு கடிதம் எழுதினேன். அதற்கும் நீங்கள் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லையே’ என்றார்.
இந்தக் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளிக்க மறுத்துவிட்டார். அது பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்.
நேற்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாகக் கூறியது நினைவுகூறத்தக்கது.
நெல்லையில் ராகுல்:
நேற்று மதுரையில் தங்கிய ராகுல் காந்தி இன்று காலை மதுரையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இங்கு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்துவிட்டு திருப்பூர் செல்லும் அவர் பின்னர் திருச்சி சென்றுவிட்டு இன்று இரவே டெல்லி திரும்புகிறார்.

No comments:
Post a Comment