Monday, December 20, 2010
ராஜாவுக்கு 'சம்மன்' அனுப்பியது சிபிஐ
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு கூறி முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இதன் மூலம் அவரையும் வழக்கில் ஒரு குற்றவாளியாக சிபிஐ சேர்க்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ படு நிதானமாக விசாரித்து வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. ராஜாவை இதுவரை ஏன் விசாரிக்கவே இல்லை என்றும் அது காட்டமாக கேட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் 2 முறை ராஜாவின் வீடுகள், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், அமைப்புகளில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு கூறி ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment