மும்பைத் தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமான பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல திட்டமிட்டதாகவும், தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தனது தளத்தை அமைக்கத் திட்டமிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அமெரிக்க தூதரக தகவல்கள் அடங்கிய கடிதப் போக்குவரத்தை அது வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி அமெரிக்க வெளியறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கையெழுத்திட்ட தந்தி தகவல் ஒன்றை அது வெளியிட்டுள்ளது.
பிற நாடுகளுக்கு இந்தத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடாது என்ற தலைப்பிட்டு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பு பாகிஸ்தான், இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, நேபாளத்திலும் தனது கிளைகளை வலுப்படுத்த லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் தனது செயல்பாடுகளைப் பலப்படுத்தும் முயற்சிகளை ஷபீக் காஃபா என்ற முக்கிய லஷ்கர் நிர்வாகி ஈடுபட்டு வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா முக்கியஸ்தரான ஹூசேன் என்பவரும் இதற்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். ஜூன் மாதத்தில் இந்த இருவரும் மூன்று முக்கிய திட்டங்களுடன் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளை விரைவுபடுத்தியுள்ளனர்.
அந்த மூன்று முக்கிய திட்டங்கள் - குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தீர்த்துக் கட்டுவது, இந்தியாவில் பலம் வாய்ந்த பயிற்சி முகாமை தொடங்குவது, ஒரு காரைப் பயன்படுத்தி மிக முக்கியத் திட்டம் ஒன்றை நிறைவேற்றுவது (கார் குண்டுவெடிப்புத் திட்டமாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது).
இந்தியாவைச் சேர்ந்த சமீர் என்ற நபருடன் இணைந்து இந்தத் திட்டங்களை செயல்படுத்த ஹூசேன், லஷ்கர் அமைப்புக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் தமிழகம், கர்நாடகம், கேரளாவில் பலம் வாய்ந்த பயிற்சி முகாம்களை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஹூசேனுடன் காஃபா விவாதித்துள்ளார்.
தென்னிந்தியாவில் 2 முக்கிய குழுக்களை நியமிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வேலைகளிலும் லஷ்கர் ஈடுபட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்தில் லஷ்கர் அமைப்பை பலம் வாய்ந்த அமைப்பாக மாற்றும் நடவடிக்கைகளையும் அந்த அமைப்பு முடுக்கி விட்டுள்ளது.
மே மாதவாக்கில் கிடைத்துள்ள சில முக்கியத் தகவல்கள் இந்தியாவில் பெரும் தாக்குதலுக்கு லஷ்கர் திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இதை நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகிறது. இருப்பினும் என்ன மாதிரியான தாக்குதல் என்பது தெரியவில்லை.
குறிப்பாக தமிழகம் அல்லது கேரளாவை மையமாகக் கொண்ட லஷ்கர் குழுவை அமைத்து அதன் மூலம் இத்தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இவர்களுக்கு உதவ இலங்கையில் ஒரு குழுவை அமைக்கும் நடவடிக்கையிலும் லஷ்கர் ஈடுபட்டதாக தெரிகிறது.

No comments:
Post a Comment