இந்தியா தென் ஆப்ரிக்கா இடையிலான 3 ஆவது ஒரு நாள் போட்டி இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி பகல் இரவு ஆட்டமாக கேப்டவுன் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 220 ரன் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக பிளசிஸ் 60௦ ரன்னும் டுமினி 52 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணியில் ஷாகிர்கான் 3 விக்கெட்களையும் படேல்,ஹர்பஷன் சிங்க் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி துவக்கத்திலேய விக்கெட்டை பறி கொடுத்தது. எம்.விஜய் ஒரு ரன்னில் (2.2 ஓவரில்) ஸ்டெயின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹோக்லி 28 ரன்களிலும், சர்மா 23 ரன்களிலும், டோனி 5 ரன்களிலும், யுவராஜ் சிங் 16 ரன்களிலும் வரிசையாக ஆட்டம் இழந்தனர். 93 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறி கொடுத்து தவித்தது. அடுத்து களம் இறங்கிய யூசப்பதானும், ரெய்னாவும் ஆபாரமாக ஆடி நம்பிக்கை அளித்தனர்.
இருவரும இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். ரெய்னா 37 ரன்களில் மார்கெல் பந்தில் வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது 6 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 168 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் யூசப்பதான் (59 ரன்), ஸ்டெயின் பந்தில் மார்கெல்லால் ஆபாரமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டம் இழந்தார்.அடுத்து களம் இறங்கிய ஹர்பஜனும் , ஜாகீர்கானும் போராடினர். ஜாகீர்கான் 14ரன்னில் அவுட் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய அணி அப்பொழுது 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களம் இறங்கிய நெக்ரா விக்கெட் போகால் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஹர்பஜன் அருமையாக ஆடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
நெக்ரா 48. 2 ஓவரில் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். இந்தியா 48.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்பஜன் 23 ரன்களுடனும், நெக்ரா 6 ரன்களுடனும் இறுதியில் களத்தில் இருந்தனர்.
தென் ஆப்ரிக்க வீரர்கள் பல கேட்ச்களை கோட்டை விட்டது இந்திய அணி வெற்றி பெற பெரும் வாய்பாக அமைந்தது.
அதிக பட்சமாக மார்கென் 3 விக்கெட்டுகளையும் ஸ்டெயின் 2 விக்கெட்டுகளையும் கைபற்றினர்.
இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
என் பேரன் போன் பண்ணி பாட்டி மேச் பாத்தியா. சூப்பரா விளையாடராங்க்ன்னு சொல்லிண்டே இருந்தான். போன்ல யே காமெண்ட்ரி வேர சொல்லிண்டே இருந்தான். குழந்தைகளுக்குள்ள ஆர்வம் என்போல வயதான பெண்களுக்கு எந்த விளையாட்டிலுமே வருவதே இல்லை. நான் கடசி 5 ஓவர்கள் மட்டும் பார்ப்பேன்.
ReplyDelete