தனி தமிழ்ஈழம் நாட்டை உருவாக்க போராடி வந்த விடுதலைப்புலிகள் மிக வலிமையான கடற்படையை வைத்திருந்தனர். கடற்படைக்கு உதவவும் வெளிநாடுகளில் இருந்து பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு வரவும் 20 பெரிய கப்பல்களையும் விடுதலைப்புலிகள் வைத்திருந்தனர்.
இந்திய உளவுத்துறை கொடுத்த தகவல்கள் மூலம் சிங்கள கடற்படை விடுதலைப்புலிகளின் கப்பல்களை ஒவ்வொன்றாக குண்டு வீசி அழித்தது. அந்த வகையில் 11 கப்பல்கள் அழிக் கப்பட்டன.
ஒரு கப்பலை சிங்கள கடற்படை கைப்பற்றிக் கொண்டது. மீதமுள்ள 8 கப்பல்கள் சிங்கள கடற்படையிடம் பிடிபடவில்லை. தற்போது அந்த 8 கப்பல் களும் சர்வதேச கடல் பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்தகப்பல் களையும் பறிமுதல் செய்து சொந்தமாக்கிக் கொள்ள சிங்கள அரசு துடிக்கிறது.
ஆனால் அந்த 8 கப்பல்களும் வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிங்கள அதிகாரிகள் தவித்தப்படி உள்ளனர். இந்த 8 கப்பல்களையும் தற்போதும் விடுதலைப்புலிகள் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
எட்டு கப்பல் இவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பி இருக்கிறது. என்றால், அந்த எட்டு கப்பலிலும் எத்தனை விடுதலை புலிகள் தப்பி இருப்பார்கள். அப்படி தப்பியவர்கள் சாதாரண விடுதலை புளிகலாகவா இருப்பார்கள். விடுதலைபுலிகளின் முக்கியத்தலைவர்களாக தானே இருக்க வேண்டும். அதை ஏன் ஒத்துகொள்ள தயங்குகிறார்கள். தங்கள் தோல்வி வெளியுலகிற்கு தெரிந்து விடும் என்பதாலா? அப்பாவி மக்களை கொன்று விட்டு விடுதளைபுலிகளையும் அதன் தலைவர்களையும் கொன்று விட்டதாக தம்பட்டம் அடிப்பது தெரிந்து விடும் என்பதாலா...?
No comments:
Post a Comment