விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று இரவு இந்திய கம்யூனிஸ்டு மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஸ்பெக்டரம் ஊழல் பற்றிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
மேடையில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து எழுந்த ஒருவர் திடீரென மேடைக்கு ஏறி அங்கு பேசிக்கொண்டிருந்த தா.பாண்டியனை பார்த்து உங்களை பற்றி பேசுங்கள், ஏன் எங்களை பற்றி பேசுகிறீர்கள் என்று அவரை தாக்க முயன்றார்.
தொடர்ந்து அவர் ஏதோ பேச முயன்றபோது அங்கிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அவரை தடுத்து தர்ம அடி கொடுத்தனர். மேடையில் இருந்து பிடித்து இழுத்து கொண்டு கீழே வந்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக விருதுநகர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சீனிவாசன் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த தா.பாண்டியனை தாக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து மேற்கு போலீசார் கட்சியினர் பிடியில் சிக்கி இருந்தவரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.
No comments:
Post a Comment