நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தலைமறைவாக இருந்த நித்யானந்தா கர்நாடக சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், நடிகை ரஞ்சிதா மட்டும் வெளியுலகில் தன்னை காண்பித்துக் கொள்ளவில்லை. நேற்று முதல் முறையாக அவர் மீடியாக்கள் முன்பு தோன்றினார். பெங்களூரில் நேற்று அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நித்யானந்தா ஆசிரமம் மேற்கொண்டு வந்த சமூக தொண்டுகள் மற்றும் நித்யானந்தரின் மீதான மரியாதை காரணமாக நித்யா னந்தாவின் பக்தையானேன். லட்சக்கணக்கான பக்தைகளில் நானும் ஒருவள், அவ்வளவுதான். வீடியோ காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எனது குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். ஆனால் என்னை நம்பினர்.
வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து நான் போலீசாரால் கைது செய்யப்படுவேனோ என்று அச்சம் ஏற்பட்டது. அதேபோல உண்மையை வெளியே கூறினால் நான் உயிரோடு இருப்பேனா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
எனது வக்கீல் தைரியம் அளித்ததால் லெனின் உள்ளிட்டோருக்கு எதிராக தற்போது புகார் பதிவு செய்துள்ளேன். வீடியோ சர்ச்சை கிளம்பிய பிறகு இதுவரை நித்யானந்தாவை சந்திக்கவில்லை. என்னதான் அவர் எனது குருவாக இருந்தாலும் நானும் ஒரு பெண்தான். எனவே, சந்திப்பை தவிர்த்துவிட்டேன்.
நித்யானந்தா ஆசிரமத்தில் அனைத்து பக்தர், பக்தைகளுமே மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருந்து வந்ததை நானே பார்த்துள்ளேன். அங்கு சட்ட விரோத நடவடிக்கைகள் நடப்பதாக எனக்கு தெரியாது. ஒரு பெண்ணின் பின்னால் மறைந்திருந்து நித்தியானந்தாவை தாக்குவது வெட்கக் கேடானது. நான் 18 ஆண்டுகளாக கலையுலகில் உள்ளேன். எனது திரையுலக வாய்ப்புகள் பாதித்தது உண¢மைதான் என்ற போதிலும் இப்போதும் கூட வாய்ப்புகள் வருகின்றன.
இவ்வாறு ரஞ்சிதா தெரிவித்தார்.
‘நாட்டிலுள்ள மிகப்பெரிய தடயவியல் நிறுவனம் (எப்.எஸ்.எல்), வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும், ரஞ்சிதாவும்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளதே?’ என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஒரு சில விநாடிகள் ரஞ்சிதா யோசனையில் ஆழ்ந்தார். தனது அருகில் அமர்ந்திருந்த வக்கீலின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். கேள்வி கேட்ட சில விநாடிகள் கழித்த பிறகே ரஞ்சிதா சமாளித்துக் கொண்டு, வீடியோ காட்சியில் நான் இல்லை என்று மட்டும் தெரிவித்தார்.
ரஞ்சிதா வழக்கு: முன்னதாக நடிகை ரஞ்சிதா, கர்நாடகாவில் உள்ள ராம்நகரம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென நேரில் ஆஜராகி, நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன், ஸ்ரீதர் மற்றும் ஆரதிராவ் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து 3 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் ஆபாசமாக படம் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

No comments:
Post a Comment