பிரபுதேவாவுடன் விவாகரத்து பெற அவரது மனைவி ரமலத் சம்மதித்துவிட்டார். இவர்களுக்கு இடையேயான பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பிரபுதேவா-நயன்தாரா இடையேயான திருமணத்துக்கும் தடை நீங்கியுள்ளது. விவாகரத்து ஜூன்மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவரைகூட பிரபுதேவா-நயன்தாராவால் பொறுக்க முடியவில்லை. இப்போதே திருமணத்திற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்ய துவங்கிவிட்டனர்.
திருமணத்தை சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். பிரபுதேவா-ரமலத் இடையேயான திருமணம் ரகசியமாக நடைபெற்றதால் இந்த திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா. திருமணத்திற்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி.,க்களும் கலந்து கொள்ள உள்ளனர். திருமணத்திற்காக, நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் சேலை தயாராகிறது. பல லட்சம் மதிப்பில் தங்க ஜரிகைகளுடன் இந்த சேலை தயாராகிறது. திருமணத்திற்கு பிறகு சென்னையில் குடியேற இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த வீட்டை ரமலத்திற்கு கொடுத்துவிட்டதால் புதுவீடும் பார்த்து வருகின்றனர்.

இந்த மாதிரி செய்திகள் எல்லாம் எப்படித்தான் சேகரிக்க முடியுதோ...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
@aranthairaja
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்