‘இதை தயவுசெஞ்சு சினிமாவா பாருங்க...’ என்று இயக்குநர் டேவிட் பிஞ்ச்சரும் திரைக்கதை எழுதிய ஆரோன் சார்க்கினும் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். ஆனால், ‘இது அப்பட்டமான பொய்... மிகைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்...’, ‘உண்மைச் சம்பவங்களுடன் ஏகப்பட்ட கற்பனைகள் கலக்கப்பட்டுள்ளன...’ என்று எதிர்தரப்பு காட்டு கத்தல் கத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த விவாத சர்ச்சைக்கு காரணமான ‘தி சோஷியல் நெட் ஒர்க்’ ஹாலிவுட் திரைப்படம் மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் போக்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருபத்தாறு வயதுக்குள் ஓர் இளைஞன் கோடீஸ்வரனானது பெரிய விஷயம்தான். இணையத்தில் அவனால் உருவாக்கப்பட்ட ஒரு தளம் நாள்தோறும் வளர்ந்து வருவதும் உண்மைதான். ஒவ்வொரு நொடியிலும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுவதும் நிஜம்தான். ஆனால், இந்த நிஜம் ப்ளஸ் உண்மைக்கு பின்னால் இருக்கும் விஷயங்களைத்தான் குற்றம்சாட்டுபவர்கள் பெரிதாக பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள்.
இணையத்தில் புழங்கும் அனைவருக்கும் ‘முகநூல்’ என்னும் ‘ஃபேஸ்புக்’ குறித்து தெரியும். பல் தேய்க்க பிரஷ்ஷை பயன்படுத்துவது போல் அந்தத்தளம், இணைய உலகில் வலம் வருபவர்களின் வாழ்க்கையுடன் ஒன்று கலந்துவிட்டது. உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்தவொரு நபருடனும் இந்தத்தளம் மூலமாக நட்பாகலாம். பிசினஸ் பேசலாம். வேலை தேடலாம். வேலையில் அமரலாம். நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். காதலிக்கலாம். பிடித்த சினிமாவை பரிமாறிக் கொள்ளலாம். விருப்பமான பாடலை இணைந்து கேட்கலாம். விவாதிக்கலாம். கொஞ்சலாம். சண்டை போடலாம். பிஎச்டி தீசிஸ் எழுதலாம். விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம்... லாம்... லாம்...
இவையனைத்துமே சாத்தியம்தான். அதற்கு கையில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அல்லது இணையத் தொடர்புள்ள செல்ஃபோன் போதும். வேறு எதுவுமே தேவையில்லை. ஆம், தனிமையில் அமர்ந்தபடி உலகத்துடன் உறவாடலாம். இந்த வெர்ச்சுவல் உலகை 2004ல் மார்க் சூக்கர்பேக் வடிவமைத்தபோது அவருக்கு வயது 19தான். தன் கல்லூரி நண்பர்களுக்காக அவர் உருவாக்கிய தளம், இப்படி உலக இளைஞர்களின் தளமாகும் என்று துளிக்கூட அவர் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், இத்தளம் உருவாக மார்க் மட்டும் காரணமில்லை என்பதுதான் முக்கியம். சில நண்பர்களின் துணையுடனேயே அதை ஆரம்பித்தார். டாலர் டாலராக பணம் வர ஆரம்பித்ததும் நட்பில் விரிசல் விழுந்தது. யார் உரிமையாளர் என்ற கேள்வியை நீதிமன்றம் விவாதித்தது; தீர்த்தது.
போதும் போதாததற்கு மார்க் படித்த கல்லூரியின் சீனியர் மாணவர்களில் இரண்டுபேர், மாணவர்களுக்கான தளம் ஒன்றை ஆரம்பித்து தரும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்களாம். ‘அப்படி ஆரம்பித்த தளத்தைதான் தன்னுடையதாக்கிக் கொண்டார். எனவே ஐடியா எங்களுடையது. ‘ஃபேஸ்புக்’கும் எங்களுக்கே சொந்தம்’ என்று சொல்லி மார்க் மீது அவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள். மார்க்கும் உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு வழங்கினார். ஆனால், வேண்டுமென்றே மார்க்கெட்டில் உள்ள தொகையை குறைத்து மதிப்பிட்டு நஷ்ட ஈடு வழங்கிவிட்டார் என மார்க் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்தார்கள்.
இதெல்லாம், மார்க் சூக்கர்பேக் என்னும் 26 வயது இளைஞனின் வாழ்க்கை சரித்திரம். இதை அடிப்படையாக வைத்து ‘தி ஆக்சிடெண்டல்
பில்லியனர்ஸ்’ என்ற புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. அதை தழுவித்தான் ஆரோன் சார்க்கின் இப்படத்துக்கான திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
இது நிஜக்கதை. திரை கதை?
பத்தொன்பது வயதே ஆன ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவனான மார்க், ‘ஃபேஸ் புக்’கை உருவாக்குகிறான். அவனது புக்கில் ஒரே மாதத்தில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பாதியளவு மாணவர்கள் இணைந்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரே ஆண்டில் அந்த எண்ணிக்கை 500 மில்லியனாக வளர்கிறது. இத்தளத்தில் இணைந்தவர்கள் தங்களுக்குள் அடுப்பங்கரை முதல் அந்தரங்கம் வரை பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தளத்தை மார்க் ஆரம்பித்தபோது அவருக்கு 3 சகோதரிகள். சொந்தமாக ஒரு டிவி கூட இல்லை. அப்படிப்பட்ட நிலையிலிருந்த மார்க், தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக ஆகிறான். பணத்தைவிட தன் தளம் மூலம் பிரபலமாக வேண்டும். அதுவே அவனது லட்சியம்.
கனவு மெய்ப்படுகிறது. உலக வி.ஐ.பி லிஸ்டில் சேர்ந்துவிடுகிறான். பெரிய பத்திரிகைகளின் அட்டைகளை அலங்கரிக்கிறான். இந்த பூமி கிரகத்திலேயே விளம்பரத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் நபராக மாறியபோதும் தனிமை விரும்பியாகவே இருக்கிறான். ‘ஃபேஸ்புக்’கின் நல்ல வழியெல்லாம் நிறைவேறும் அதே நேரம், கெட்டவழியும் பிரச்னைகளாக விஸ்வரூபம் எடுக்கின்றன. இவற்றையெல்லாம் விளக்குவதே ‘தி சோஷியல் நெட் ஒர்க்’ படம். இப்படத்தை இயக்கியுள்ள டேவிட் பிஞ்ச்சர், ‘ஏலியன்’, ‘செவன்’, ‘ஃபைட் க்ளப்’, ‘ஸோடியா’ போன்ற படங்களை கொடுத்தவர். கோல்டன் குளோபல் உட்பட பல விருதுகளை குவித்தவர். இன்றைய தலைமுறைக்கான பாடம்தான் இப்படம். பாடத்தை புரிந்து படிப்பவர்கள் மட்டுமே அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்பது உலக நியதி. இப்படமும் அந்த உலக நியதியைத்தான் பதிவு செய்திருக்கிறது.

எதிலுமே நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். நாமதான் நல்லவிஷயங்களை மட்டுமே தெரிவு ச்ய்துக்கணும்.
ReplyDelete