Monday, January 3, 2011
என்னை சிந்திக்கவும் வியக்கவும் வைத்தவர் -ரஜினி பேச்சு
கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூல் வெளியீட்டின்போது என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா, என்று எழுதி சிந்திக்க வைத்தவர் வைரமுத்து என்றார் ரஜினிகாந்த். அதேபோல கமல்ஹாசன் பேசுகையில், இந்திரலோகத்து முந்திரியோ என்று எனக்காக பாடல் எழுதித் தந்தவர் வைரமுத்து என்று புகழாரம் சூட்டினார்.
சென்னையில் நேற்று நடந்த கவிஞர் வைரமுத்துவின் 'ஆயிரம் பாடல்கள்' வெளியீட்டு விழாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட ரஜினிகாந்த் - கமல்ஹாஸன் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியது:
"எனக்கும், வைரமுத்துவுக்கும் 30 வருட நட்பு. இந்த விழாவில், ஐந்து நிமிடம்தான் பேச வேண்டும் என்றார்கள். நிறைய பேச வேண்டும் என்றால், கொஞ்சம் சிந்தித்தால் போதும். கொஞ்சம் பேச வேண்டும் என்றால்தான் நிறைய சிந்திக்க வேண்டும்!
என் மிக மிக நெருங்கிய நண்பர்களில், வைரமுத்துவும் ஒருவர். அப்போதும் சரி, இப்போதும் சரி, என் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர். அவர் எழுதிய வரிகள் என்னை ஊக்கப்படுத்தி இருக்கின்றன. "என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா?'' என்று எழுதி, என்னை சிந்திக்கவும், வியக்கவும் வைத்தவர் வைரமுத்து...,'' என்றார்.
கமல்ஹாஸன் பேசுகையில், "ஷங்கர் இங்கே பேசியபோது கவிஞர் கொடுத்த முந்திரி பற்றி பேசினார். அவர் எனக்குத்தான் முதன்முதலாக முந்திரி கொடுத்தார். ``இந்திரலோகத்து முந்திரியோ...மன்மத நாட்டு மந்திரியோ'' என்று என் படத்துக்குத்தான் எழுதினார்.
அவர் எழுதிய 'வானம் எனக்கொரு போதிமரம்...நாளும் எனக்கொரு சேதி சொல்லும்' என்ற வரிகளை கேட்டு வியந்தேன். அன்று முதல் வைரமுத்து எனக்கு நண்பர் ஆனார். அடுத்து அவர் 'யார் யார் சிவம்' என்ற பாடலை எழுதி, எனக்கு பெருமை சேர்த்தார்..", என்றார்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment