மகனை தன் வசம் ஒப்படைக்கக் கோரி, நடிகர் ஆகாஷ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, நடிகை வனிதா, ஆனந்தராஜுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ஆகாஷ் தாக்கல் செய்த மனு: எனது மகன், மகள் நலனில் மிகுந்த அக்கறை இருந்ததால், இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பரஸ்பர விவாகரத்து பெற்று ஆறு மாதங்களுக்குள், ஆனந்தராஜ் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு, வனிதாவை ஆனந்தராஜ் திருமணம் செய்துள்ளார் என எனக்கு தெரிய வந்துள்ளது. முதல் மனைவியிடம் இருந்து ஆனந்தராஜ் விவாகரத்து பெறவில்லை. அவருக்கு வருவாய் ஆதாரமும் கிடையாது. முதல் மனைவி, மூன்று குழந்தைகளையும் பார்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ்.
நியூசிலாந்தில், விஜய் ஸ்ரீஹரியை படிக்க வைப்பதாக வனிதா உறுதியளித்தார். அதனால், வனிதா வசம் எனது மகன் இருப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இரண்டாவதாக வனிதா திருமணம் செய்து கொண்டதால், எனது மகன், மகள் இருவரையும் வைத்துக் கொள்ளும் தகுதியை அவர் இழந்து விட்டார். மகனின் விருப்பப்படி, கடந்த நவம்பர் மாதம் என்னிடம் வனிதா ஒப்படைத்தார். வனிதா, ஆனந்தராஜ் இருவரின் கொடுமை காரணமாக, அவர்களுடன் சேர்ந்து வாழ, எனது மகன் விஜய் விரும்பவில்லை. வனிதா, ஆனந்தராஜுக்கு பிறந்த குழந்தையும் உள்ளது. இரண்டாவது திருமணத்தின் மூலம் அவர்களுக்கு குழந்தை பிறந்த பின், எனது மகன், மகளை அவர்கள் முறையாக நடத்தவில்லை. வனிதா, ஆனந்தராஜால் எனது மகனுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது.
எனது குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு தேவை. என்னிடம் தான் அவை கிடைக்கும். எனது தாயார் அவர்களை அன்பாக கவனித்துக் கொள்வார். குழந்தைகளை கவனித்துக் கொள்ள, எனக்கு போதிய வருமானம் உள்ளது. பெற்றோருடன் வனிதா சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மீது, கிரிமினல் வழக்கும் உள்ளது. ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். எனக்கு நிதி ஆதாரம் உள்ளது. ஆனால், வனிதா, ஆனந்தராஜுக்கு சொத்து கிடையாது. எனது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அவர்களால் அளிக்க முடியாது. இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காக, நான் திருமணம் செய்ய மாட்டேன். எனவே, என் வசம் விஜய் ஸ்ரீஹரி இருப்பதில் வனிதா, ஆனந்தராஜ் குறுக்கிடக் கூடாது. என் மகனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் இதயதுல்லா ஆஜராகினர். மனுவுக்கு வரும் 18ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, வனிதா, ஆனந்தராஜுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டார்.
ஆகாஷ் மனு தாக்கல் செய்தது ஏன்? நடிகர் விஜயகுமார் -நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி, ஜோவிகா என்கிற குழந்தைகள் உள்ளனர். வனிதா -ஆகாஷ் இருவருக்கும் இடையே பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. ஆனந்தராஜ் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு மகள் உள்ளார். ஆனால், நடிகர் ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளவில்லை. மகன் விஜய் ஸ்ரீஹரி யார் வசம் இருப்பது என்பது குறித்து வனிதா, ஆகாஷ் இருவருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. மகனை ஒப்படைக்கக் கோரி ஆந்திர கோர்ட்டில் ஆகாஷ் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த செகந்திராபாத் கோர்ட், "முதலில் உத்தரவு பிறப்பிக்கும் போது, இந்த கோர்ட் வரம்புக்குள் வனிதா, விஜய் ஸ்ரீஹரி வசித்து வந்தனர். தற்போது, இந்த கோர்ட் வரம்புக்குள் விஜய், அவரது தந்தை, தாய் வசிக்கவில்லை. எனவே, மனுவை இந்த கோர்ட் விசாரிக்க முடியாது என உத்தரவிட்டது. இதையடுத்து, ஐகோர்ட்டில் ஆகாஷ் மனு தாக்கல் செய்துள்ளார்

No comments:
Post a Comment