சினிமா தியேட்டர் கட்டணத்தை அதிகரிக்கச் சொல்வதே தயாரிப்பாளர்கள்தான் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடியாக தெரிவித்துள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது புகார் செய்யலாம் என்று தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாவது:
கடந்த 8ம்தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து, எங்கள் வருத்தங்களையும், விளக்கங்களையும் தர கடமைப்பட்டுள்ளோம். திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து நாங்கள் மட்டும் சம்பாதிப்பது போல் ஒரு கருத்தை பொதுமக்களிடம் உருவாக்குவது சரியல்ல. இந்த சூழ்நிலையில் பல ஆண்டுகளாக ஏறிவரும் மின்கட்டண உயர்வு, ஊழியர்கள் சம்பள உயர்வு, திரையரங்கு பராமரிப்பு செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் டிக்கெட் கட்டணம் உயர்த்தி தரப்படவில்லை. எனவே அனைத்து தரப்பினராலும்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணம் அதிகமாக விற்றால், திரையரங்குகள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தீர்மானம் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரின் மரியாதையையும், கவுரவத்தையும் சீர்குலைப்பது போல் உள்ளது. அவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டுமென்றால் அதிக விலைக்கு டிக்கெட்டை விற்க தூண்டிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி, அரசு தக்க நடவடிக்கை எடுத்தால், இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான முடிவு ஏற்படும். ஏனென்றால் தியேட்டர் கட்டணத்தை அதிகரிக்கச் சொல்வதே தயாரிப்பாளர்கள்தான்.
மேலும் தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு, திரையரங்குகளில் நுழைவு கட்டணங்களை மாற்றியமைத்து, திரையுலகை காப்பாற்றி ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இனிமேல் சதவீத அடிப்படையில் மட்டுமே திரைப்படங்களை திரையிடுவது என்று எங்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அவ்வாறு சதவீத அடிப்படையில் திரைப்படத்தை திரையிடும்போது, திரையரங்குகளின் அதிகபட்ச நிர்வாக செலவுகளை கருத்தில் கொண்டு 55 சதவீதம் மட்டுமே பங்கு தர முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடிகர் விஜய்யின் சுறா படத்தால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக உருவான பிரச்னையால், தியேட்டர் அதிபர்கள் மீது தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினார்கள். இப்போது தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பதிலடி கொடுத்திருப்பதால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியோ தியேட்டர் கட்டணம் குறைந்தால் சரிதான் என்பது மட்டுமே சாதாரண ரசிகனின் கருத்து!

No comments:
Post a Comment