சமூக இணைய தளமான பேஸ்புக் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரியாகி விட்டது. சமூக இணைப்பு தளமான பேஸ்புக் பிறந்த கதையை மையமாக கொண்டு உருவான படம் சோஷியல் நெட்வொர்க். இந்த படத்திற்குத்தான் இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு கோல்டன் குளோப் கிடைத்ததால்தான், ரஹ்மானின் கையை விட்டு அந்த வாய்ப்பு நழுவியது.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை ஆகிய 4 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. சிறந்த இசையமைப்புக்காக அந்தப் படத்தின் டிரன்ட் ரெஸ்னர், அட்டிகஸ் ரோஸ் ஆகிய இருவர் விருதை பெற்றனர்.
No comments:
Post a Comment