அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாக இலங்கை அதிபர் ராஜபக்சே சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு உள்ள அம்னஸடி இண்டர் நேசனல் மனித உரிமை அமைப்பு; ராஜபக்சேவிடம் போர் குற்றம் தொடர்பாக அமெரிக்கா,விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது .
வாஷிங்டனில் அம்னஸ்டி அமைப்பின்ர் ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் சாம் ஜரிபி கூறியதாவது:
இலங்கையில் ஏராளமான அளவில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடந்துள்ளன.மேலும் இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களால் ஏராளமான மக்கள் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், இதேபோல விடுதலை புலிகள் அமைப்பினரும் மனித உரிமையை மீறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் போர்க்குற்றங்களில் ஈடுபடும் நாடுகளிடம் விசாரணை நடத்துவதற்கும், அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் சர்வதேச சட்டத்தின் கீழ் அமெரிக்கா உரிமை பெற்றுள்ளது. எனவே ராஜபக்சே மீதான விசாரணையைத் துவங்கவேண்டும் என்றார்.
ராஜபக்சே திடீரென்று அமெரிக்கா சென்றுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொழும்புவிலுள்ள அதிபரின் அலுவலக தலைமை இயக்குநர் பண்டுல ஜெயசேகரா, அமெரிக்காவிற்கு ராஜபக்சே என்றுள்ளது அவருடைய தனிப்பட்ட பயணம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவும் அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment