அ.தி.மு.க. கூட்டணியில் கார்த்திக் கட்சிக்கு 2 தொகுதியை ஒதுக்கப்படும் என தெரிகிறது.
நடிகர் கார்த்திக் கடந்த சட்டமன்ற தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி தலைவராக இருந்தார். 45 தொகுதிகளில் அவர் கட்சி தனித்து போட்டியிட்டது. அதே கட்சியில் இருந்த சந்தானம் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார். முதுகுளத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், திருமங்கலம், ராமநாதபுரம், சிவகாசி, மதுரை மேற்கு, இளையான்குடி, சேரன்மகாதேவி, ஆலங்குளம் உள்ளிட்ட பல தொகுதிகளில் கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் அ.தி.மு.க. ஓட்டுக்களை பிரித்தனர். கார்த்திக்கால் சுமார் 10க்கும் மே
ற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றதாக கூறப்பட்டது. ஆனால் கார்த்திக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
ற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. தோற்றதாக கூறப்பட்டது. ஆனால் கார்த்திக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
தற்போது பார்வர்டு பிளாக்கில் இருந்து விலகி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் புது கட்சி துவங்கி நடத்தி வருகிறார். வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இக்கட்சி போட்டியிடுகிறது. ஜெயலலிதாவும், கார்த்திக்கும் நேற்று நேரில் சந்தித்து பேசி இந்த கூட்டணியை உறுதி செய்தனர். அ.தி.மு.க. கூட்டணியில் கார்த்திக் 10 தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு 2 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கும் என தெரிகிறது.
No comments:
Post a Comment