விஜய் ரசிகர்களை ஆவலோடு எதிர்பார்க்க வைத்திருக்கிற இந்த படம், பொங்கலுக்கு வருமா என்ற கேள்விக்கு இந்த நிமிடம் வரைக்கும் கிடைக்கிற பதில் ஊசலாட்டம்தான்! நாலாபுறமும் வந்து மோதுகிற பிரச்சனையால் விழி பிதுங்கியிருக்கிறார் விஜய்யும், இப்படத்தை வெளியிடப் போகும் ஷக்தி சிதம்பரமும்.
இதற்கிடையில் 75 பிரிண்டுகளுக்கு மேல் வெளியிடப்படும் படங்களுக்கு பதினைந்து சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கமே முன்வந்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது. ஒருவேளை இது அமல்படுத்தப் பட்டால் 37 கோடிக்கு வாங்கப்பட்ட விஜய் படம் பெரும் சிக்கலுக்குள்ளாகும் என்கிறார்கள்.
இந்த ஒரு படம் மட்டுமல்ல, பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் சிறுத்தை, ஆடுகளம், இளைஞன் ஆகிய மூன்று படங்களும் கூட கிடைத்த லாபத்தில் குறிபிட்ட பகுதியை கேளிக்கை வரியாக செலுத்த வேண்டி வரும். இப்பவே சிறுத்தை படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஏரியாவுக்கும் இருபது லட்ச ரூபாயை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.
காவலன் படம் பொங்கலுக்கு வரப்போவதில்லை என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு எழுந்ததற்கு காரணம்? இப்படத்தை என்எஸ்சி என்ற மிகப்பெரிய ஏரியாவில் ரிலீஸ் செய்யப் போகும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இன்னும் தியேட்டர்களையே கமிட் செய்யவில்லையாம்.
ஒரு தடவ முடிவெடுத்துட்டா அவரு பேச்சை அவரே கூட கேட்காம போகட்டும். அது பிரச்சனையில்ல. இப்போ அடுத்தவங்களும் கேட்காம போயிட்டாங்களே... அதுதான்
பிரச்சனை!
காவலனை குறிவைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இத்தகைய முடிவின் பின்னணியில் அரசால் புகுந்து விளையாடுவது தெளிவாக தெரிகிறது.
No comments:
Post a Comment