சிறுத்தை படத்தின் திருட்டு சி.டிக்களை தடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் செய்தார் நடிகர் கார்த்தி.
டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி-தமன்னா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி உள்ளபடம் சிறுத்தை. முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள கார்த்தி, கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், பிக்பாக்கெட் திருடனாகவும் நடிப்பில் மிரட்டியுள்ளார். படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் போலீசில் நடிகர் கார்த்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் சிறுத்தை படத்தின் திருட்டு சி.டி.க்களை தடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
புகார் அளித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, "சிறுத்தை படத்தின் டி.வி.டிக்கள் மற்றும் சி.டி.க்கள் கல்லூரி மற்றும் கோயில் வாசல்களில் வைத்து விற்பனை செய்து வருகி்ன்றனர். இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தபடத்திற்காக தயாரிப்பாளர் நிறைய பொருட்செலவு செய்துள்ளார். திருட்டு சி.டிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசிடம் புகார் அளித்தேன். என்னுடைய படங்கள் மட்டும் அல்ல இதுபோன்று நிறைய புதுபடங்களின் திருட்டு சி.டிக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே திருட்டு சிடிக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். திருட்டு சி.டிக்களால் படத்தின் தயாரிப்பாளர் முதல் விநியோகதஸ்ர்கள், தியேட்டர் அதிபர்கள் வரை அனைவரும் பாதிப்படைகின்றனர். ஆகவே இதனை தடுக்க வேண்டும்" என்றார்.
"ராக்கெட் ராஜா" பெயர் சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "படத்தில் பிக்பாக்கெட்டாக வரும் கேரக்டருக்கு ஏற்றபெயர் என்பதால் அந்த பெயரை வைத்தோம். மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அந்த பெயரை வைக்கவில்லை. ரசிகர்களிடம் அந்த பெயர் நல்ல வரவேற் பெற்றுள்ளது. ஆகையால் பெயரை மாற்றும் எண்ணம் ஏதும்இல்லை. இதுதொடர்பாக கொலை மிரட்டல் எதுவும் எனக்கு வரவில்லை" என்றார்.
No comments:
Post a Comment