தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (92). இவர் இனவெறிக்கு எதிராக போராடியவர். அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர். இவர் மரணம் அடைந்து விட்டதாக ஒரு இணைய தளத்தில் செய்தி வெளியானதாக தெரிகிறது.
இதனால் தென்ஆப்பிரிக் காவில் வதந்தி பரவியது. இதை தொடர்ந்து பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இந்த தகவலை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை மறுத்தது. மண்டேலா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். எனவே, இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
அமைதியாக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அந்த அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் ஷெலோ ஹட்டாய் வெளியிட்டுள் ளார். இந்த வதந்தி பரவ அந்த இணையதளத்தை பயன்படுத்தியவர் தான் காரணம் என கூறப்படுகிறது.
ஆனால் இந்த இணையதளம் பல பிரபலங்கள் மரணம் அடைந்ததாக ஜோக்குகளை வெளியிட்டுள்ளது. பாடகர் சுரேதா பிராங்க்களின், நடிகர்கள் சார்லி ஷீன், ஜானிதிப், மெஹாகன் பிரீமன் ஆகியோர் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியிட்டு பின்னர் அது ஜோக் என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment