தனுஷுடன் நடித்த ஆடுக்களம் படத்தின் கதாநாயகி டாப்ஸி. இவர் இப்போது நடிகர் ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் டாப்ஸி, தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில்தான் தெலுங்கு டைரக்டர் பூரி ஜகன்நாத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புத்தா என்ற புதிய இந்தி படத்தில் நாயகியாக நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. படத்தின் நாயகன் அமிதாப் பச்சன் என்பதால் டாப்ஸி உடனே ஒப்புக் கொள்வார் என எதிர்பார்த்த பூரி ஜகன்நாத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறதாம். அமிதாப் படத்தில் நடிக்க டாப்ஸி மறுத்து விட்டாராம். படத்தை தயாரிக்கும் ராம்கோபால் வர்மா அழைத்தும் டாப்ஸி மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாப்ஸி தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் வந்தான் வென்றான், தெலுங்கில் வாஸ்து நா ராஜூ, மிஸ்டர் பெர்பக்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment