அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சி நடத்தி வருகிறது. ஆனால், விண்வெளியில் செக்ஸ் உறவு கொண்டு அதன் மூலம் அங்கேயே குழந்தை பெற முடியுமா? என்ற ஆராய்ச்சியை இதுவரை மேற்கொள்ளவில்லை. அந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஒரு விஞ்ஞானி ஆதங்கப்பட்டுள்ளார்.
“செவ்வாய் கிரகத்தில் செக்ஸ்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், கலிபோர்னியாவின் பிரெய்ன் ஆய்வு மைய விஞ்ஞானி ராவ்ன் ஜோசப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மனிதர்களுக்கு “செக்ஸ்” உணர்வு அதிகம் உள்ளது. இது குறித்து அவர்கள் நிறைய சிந்தனை உடையவர்களாக உள்ளனர். எனவே, அவர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி நீண்ட நாட்கள் தனிமையில் விட வேண்டும். அப்போது அவர்களுக்குள் “செக்ஸ்” உணர்வு ஏற்படும். அதன் மூலம் அவர்களால் நிச்சயம் குழந்தை பெற முடியும். இதன் மூலம் வேற்று கிரகத்தில் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை அந்த சிசு பெறும்.
நாசா மையம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி வருகிறது. ஆனால், விண்வெளியில் “செக்ஸ்” குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளவில்லை. அந்த விஷயத்தில் அது மவுனம் சாதித்து வருகிறது. எனவே, விண்வெளியில் இந்த ஆய்வை மேற்கொண்டு அங்கு குழந்தை பெற முடியுமா? என்பதையும் அறிய வேண்டும்.
நாசாவினால் இச்சாதனையை கட்டாயம் நிகழ்த்த முடியும் என்று பேசினார். ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள நாசா தயாராக இல்லை. ஏனெனில் விண்வெளி வீரர்களுக்கு என்று கவுரவமும், மரியாதையும் உள்ளது. அதை சீர் குலைக்க நாசா விரும்ப வில்லை என தெரிகிறது
No comments:
Post a Comment