அஜித்தின் 50வது படமான மங்காத்தாவில் ஏகப்பட்ட நட்சத்திர கூட்டம். அஜீத், திரிஷாவை தவிர, அர்ஜுன், லஷ்மிராய், பிரேம்ஜி, வைபவ் உட்பட புதுமுகங்கள் என ஒரே கலைவிழாபோலத்தான் இருக்கிறது படப்பிடிப்புத்தளமும். இந்த நட்சத்திர கூட்டணியில் இப்போது புதிதாக சேர்ந்திருக்கிறார் அஞ்சலி.
'அங்காடித் தெரு' படத்திற்குப் பிறகு அஞ்சலின் திறமை பேசப்பட்ட அளவிற்கு அவரின் அடுத்தப் படங்கள் எதுவும் அந்த அளவிற்கு பெரிதாக அமையவில்லை. இனி புதுமுகங்கள் படத்தில் நடிக்கப்போவதில்லை என்று ஒரு தீர்மானத்தை கூட நிறைவேற்றிவிட்ட அஞ்சலிக்கு தற்போது அதிர்ஷ்ட்டம் அடித்திருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆம், அஜீத்தின் 'மங்காத்தா' ஆட்டத்தில் அஞ்சலியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
சிறிய வேடமாக இருந்தாலும் பெரிய படமாச்சே என்று சந்தோஷத்துடன் சம்மதம் தெரிவித்த அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்திருக்கும் என்று யோசித்தால், 'தூங்காநகரம்' படத்தில் இவர்தான் நாயகி. அந்த படத்தை தயாரித்த கிளவுட் நைன் மூவிஸ் தான் அஜீத்தின் படத்தையும் தயாரிக்கிறது. அந்த ரூட்டில்தான் அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment